×

பழுதான பஸ்சை தள்ளிய மாணவிகள் டிரைவர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட்

நாகர்கோவிலில் இருந்து மணக்குடிக்கு சென்ற அரசு பஸ் கடந்த சில நாட்களுக்கு முன் நடு வழியில் பழுதானது. இந்த பஸ்சை அதில் இருந்த கல்லூரி மாணவிகள் இறங்கி தள்ளினர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட பஸ்சை இயக்கிய டிரைவர், கண்டக்டர், பராமரிப்பு பிரிவு சூப்பர்வைசர் உள்பட 4 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘நாகர்கோவில் மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வெளியே சென்ற சிறிது தூரத்திலேயே பேட்டரி பிரச்னையால் பஸ் ஆப் ஆகி உள்ளது.

உடனடியாக அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள மெக்கானிக்குகளை அழைத்து பிரச்னையை சரி செய்து இருக்கலாம். அல்லது பயணிகள், மாணவிகளை மாற்று பஸ்களில் அனுப்பி இருக்கலாம். அதை விடுத்து, மாணவிகளை வைத்து பஸ்சை தள்ள வைத்தது தவறு என்பதால் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பஸ்சில் பேட்டரி தன்மையை பரிசோதனை செய்ய தவறிய சூப்பர்வைசர், பணியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்’ என்றனர்.

The post பழுதான பஸ்சை தள்ளிய மாணவிகள் டிரைவர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Manakudy ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் ஒழுகினசேரி, புத்தேரி...