×

வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் திடீர் ஆய்வு விரைந்து முடிக்க உத்தரவு ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் நடைபெற்று வரும்

போளூர், ஆக. 30: ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் திடீரென ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கூடுதல் கலெக்டர் செ.ஆ.ரிஷப் ஆய்வு செய்தார். ஜவ்வாதுமலை ஒன்றியம் கீழ்செப்பிலி முதல் மேல்செப்பிலி வரை ₹49 லட்சம் மதிப்பில் போடப்பட உள்ள ஜல்லி சாலைகள், கருங்கல் வரப்பு அமைத்தல், பள்ளியில் சமையல் கூடம் கட்டப்பட்டதையும், காலை உணவு சரியாக சமைக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து பலாமரத்துர் ஊராட்சியில் மினி பூங்கா அமைக்கப்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்து பூங்காவிற்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி பூக்கள், பசுமையான புற்கள் வளர செய்யும்படி செய்ய வேண்டும். இதற்காக சொட்டு நீர்பாசனம் ஏற்படுத்த வேண்டும். சாலை வசதி செய்ய வேண்டும் என்றார். தோப்பூர் அரசு தொடக்க பள்ளியில் ₹22 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்படும் பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்தார். பட்டரைக்காடு பகுதியில் தனிநபர் கிணறு ₹8 லட்சத்து 50 ஆயிரம் செலவில் அமைக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செயதார். அனைத்து பணிகளையும் உடனடியாக விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது ஒன்றிய குழு தலைவர் எம்.ஜீவாமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நா.பிரகாஷ், கா.ேரணுகோபால், உதவி பொறியாளர் த.தமிழ்செல்வன், பணி மேற்பார்வையாளர் அ.அரங்கராசன், என்.குமார், கோவிலுர் ஊராட்சி மன்ற தலைவர்அ.நடேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

The post வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் திடீர் ஆய்வு விரைந்து முடிக்க உத்தரவு ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் appeared first on Dinakaran.

Tags : Javvadumalai Union ,Crystal ,Javvadumalai Union.… ,Dinakaran ,
× RELATED அயன்கரிசல்குளத்தில் 88 ஹெக்டேரில்...