×

அம்பை நகராட்சி கூட்டம்

அம்பை, ஆக.30: அம்பாசமுத்திரம் நகராட்சி உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் தலைவர் பிரபாகர பாண்டியன் தலைமையில் நடந்தது.ஆணையாளர் ராஜேஷ்வரன், துணைத்தலைவர் சிவசுப்பிரமணியம் (எ) கேபிள் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி உதவி அலுவலர் குமரேசன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் சமுதாய நலக்கூடம் சீரமைப்பு, குழந்தைகள் ஊட்டச்சத்து மைய பராமரிப்பு, சாலை அமைத்து தருவது, வாறுகால் சீரமைப்பு, குடிநீர் குழாய்கள் அமைத்தல், கழிவுநீர் ஓடைகள் மறுசீரமைப்பு, மின் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட அடிப்படை பணிகளுக்கு மன்றத்தில் அனுமதி அளித்து 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 4வது தீர்மானமாக அம்பாசமுத்திரம் நகராட்சி 13வது வார்டு கவுன்சிலர் பேச்சிக்கனியம்மாள் வைத்த கோரிக்கையின்படி அம்பை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் எதிரே உள்ள சந்திப்பில் கலைஞர் நூற்றாண்டை யொட்டி அவரது சிலை அமைக்க கோரி நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post அம்பை நகராட்சி கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ambai Municipal Assembly ,Ambai ,Ambasamudram Municipality ,Prabhakara Pandian ,Commissioner ,Rajeshwaran ,Deputy ,Sivasubramaniam ,Ambai Municipality ,Dinakaran ,
× RELATED அம்பை அருகே மணிமுத்தாறில் பரபரப்பு...