×

பஸ் பயணிகளுக்கு தரமான உணவு கிடைக்கும் வகையில் சாலையோர உணவகங்களுக்கு கடும் கட்டுப்பாடு: போக்குவரத்து துறை அறிவிப்பு

சென்னை: அரசு விரைவு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு தரமான உணவை அளிக்கும் வகையில் சாலையோர உணவகங்களுக்கு கடும் கட்டுபாடுகளை போக்குவரத்து துறை விதித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: பேருந்துகளில் வரக்கூடிய பயணிகளுக்கு சாலையோர உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். பயணிகள் அருந்துவதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். கழிவறையை உபயோகப்படுத்தும் பயணிகளிடம் இருந்து ரூ.5 பெற்றுக்கொள்ளலாம். மேலும், உணவகத்தில் விற்கப்படும் உணவு பொருட்களின் விலைப்பட்டியல் பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் பலகையை வைக்க வேண்டும்.

அதேபோல, உணவகத்தில் விற்கப்படும் அனைத்து பொருட்களும் நியாயமான விலையிலும், அதிகபட்ச ஆதார விலையை விட அதிகம் இல்லாமல் இருக்க வேண்டும். அதன்படி, உணவு வாங்கும் பயணிகளிடம் கட்டாயம் அதற்கான கணினி மூலம் ரசீது வழங்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றி இயங்கும் உணவகங்களுக்கு பராமரிப்பு மற்றும் சேவை அடிப்படையில் மதிப்பீடுகள் வழங்கப்படும். அதேபோல, 5 மதிப்பெண்களில் 2 மதிப்பெண்களுக்கு குறைவாக மதிப்பீடு பெறும் உணவகங்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பஸ் பயணிகளுக்கு தரமான உணவு கிடைக்கும் வகையில் சாலையோர உணவகங்களுக்கு கடும் கட்டுப்பாடு: போக்குவரத்து துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Transport Department ,Dinakaran ,
× RELATED தொடர் மழை பெய்தாலும் அரசு பஸ்கள் சீராக இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்