×

தேசிய செய்தித் தொடர்பாளர் அனில் அந்தோணிக்கு பா.ஜவில் புது பதவி

புதுடெல்லி: பா.ஜவின் தேசிய செய்தித் தொடர்பாளராக அனில் அந்தோணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி . இவர் சமீபத்தில் காங்கிரசில் உள்ள அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து பாஜவில் இணைந்தார். தற்போது பா.ஜவின் தேசிய செய்தித் தொடர்பாளராக அனில் அந்தோணி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பா.ஜவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா வெளியிட்டுள்ளார்.

The post தேசிய செய்தித் தொடர்பாளர் அனில் அந்தோணிக்கு பா.ஜவில் புது பதவி appeared first on Dinakaran.

Tags : Anil Anthony ,BJ ,New Delhi ,National Spokesperson ,BJP ,Senior ,Congress ,Defense Minister ,Spokesperson ,Dinakaran ,
× RELATED வரிச்சலுகை பெறுவதற்கு ஆப்பு வீட்டு...