
கொல்கத்தா: இந்தியா சுதந்திர பெற்ற 1947ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி வங்காள சட்டப்பேரவையில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் இரண்டு தனித்தனி கூட்டங்கள் நடைபெற்றன. இதில் ஒரு கூட்டத்தில் மேற்குவங்கத்தை இந்தியாவுடன் இணைக்கும் தீர்மானத்துக்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். தற்போதுள்ள வங்கதேசத்தை சேர்ந்த உறுப்பினர்கள் இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். இதை தொடர்ந்து நடந்த வங்க பிரிவினை கலவரத்தில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். பலகோடி மதிப்பிலான பொதுசொத்துகள் சேதமடைந்தன. இதையடுத்து ஆகஸ்ட் 17ம் தேதி எல்லைகளை வரையறுக்கும் சிரில் கிரிப்ட் ஆணையத்தின் நடவடிக்கைகளால் மேற்குவங்க மாநிலம் அதிகாரப்பூர்வமாக உருவானது.
இந்நிலையில் முதல்வர் மம்தாவின் எதிர்ப்புகளை மீறி கடந்த ஜூன் 20ம் தேதி மேற்குவங்க நிறுவன தினத்தை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் கொண்டாடினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கொல்கத்தாவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றிய பேசிய மம்தா பானர்ஜி, “இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து மேற்குவங்க மக்கள் எந்தவொரு நாளையும் மாநில தினமாக கொண்டாடவில்லை. ஒன்றிய பாஜ அரசு மேற்குவங்க வரலாற்றை திரிக்க முயற்சி செய்கிறது. நாம் இதை எதிர்க்காவிட்டால் ஜூன் 20ம் தேதியை மேற்குவங்க தினமாக அவர்கள் அறிவிப்பார்கள்” என்று கூறினார்.
The post மேற்குவங்கம் உருவான தினத்தை திரிக்க பாஜ முயற்சி: மம்தா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.