×

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பை கண்டித்து கர்நாடக விவசாயிகள் போராட்டம்: கேஆர்எஸ் அணையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

பெங்களூரு: தமிழ்நாட்டிற்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியா விவசாயிகள் போராட்டம் நடத்தினர். காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் அடுத்த 10 நாட்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து மண்டியா மாவட்ட விவசாயிகள் கேஆர்எஸ் அணை முன்பாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தண்ணீர் திறக்க ஒழுங்காற்று குழு செய்த பரிந்துரையின் நகல்களை விவசாயிகள் எரித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாநில அரசை குற்றம் சாட்டி கண்டன முழக்கங்கள் எழுப்பினர். காவிரி விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வரும் நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார், மண்டியா பொறுப்பு அமைச்சர் செலுவராய சுவாமி உள்ளிட்டோர் மவுனம் காப்பதாக கூறி கண்ணில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர். அப்போது தங்களது எதிர்ப்பை தெரிவித்து முழக்கம் எழுப்பினர். காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவு படி, தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறந்து விட்டால் தாங்கள் அணையில் இறங்கி போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் தெரிவித்ததால் தற்போது அங்கு அதிக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பை கண்டித்து கர்நாடக விவசாயிகள் போராட்டம்: கேஆர்எஸ் அணையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Tamil Nadu ,KRS dam ,Bengaluru ,Mandya ,
× RELATED தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது...