×

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: சுந்தர் எம்எல்ஏ தகவல்

காஞ்சிபுரம்: உத்திரமேரூரில் செப்.4ம் தேதி காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது என சுந்தர் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், உத்திரமேரூர் எம்எல்ஏவுமான சுந்தர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் செப்டம்பர் 4ம் தேதி உத்திரமேரூர் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில், மாவட்ட அவை தலைவர் இனியரசு தலைமை தாங்குகிறார். மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ அனைவரையும் வரவேற்று கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசுகிறார்.

இதில், மாவட்ட துணை செயலாளர்கள் செல்வம் எம்பி, மலர்விழி, கோகுல கண்ணன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வைக்கின்றனர். கூட்டத்தில், வருகின்ற செப்டம்பரில் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது, கட்சி ஆக்க பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் ஒன்றிய, மாநகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: சுந்தர் எம்எல்ஏ தகவல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram South District DMK Working Committee ,Sundar ,MLA ,Kanchipuram ,Kanchipuram South District DMK Executive Committee ,Uttaramerur ,Sundar MLA ,Kanchipuram South District DMK ,Executive ,Committee ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கை...