×

தென்னைநார் தொழில்களில் உள்ள சிக்கல்களை களைய வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் தமிழக அமைச்சர் மெய்யநாதன் கோரிக்கை

சென்னை: ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை, தமிழக அமைச்சர் மெய்யநாதன் மற்றும் தென்னைநார் உற்பத்தி கூட்டமைப்பினர் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். தமிழக அமைச்சர் மெய்யநாதன், தென்னை நார் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பினரை டெல்லிக்கு அழைத்து சென்றார். பின்னர் அவர்கள் சார்பில், அமைச்சர் பூபேந்தர் யாதவிடம் நேற்று கோரிக்கை மனுவினை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்னை நார் தொழில்களை ஆரஞ்சு என வகைப்படுத்துவதால் தென்னை நார் தொழில்களில் சிரமங்கள் உள்ளன.

தொழில் வீழ்ச்சியடைந்து வருகின்றன. மின் சுமை தேவைகள் மாற்றம், கான்கிரீட் தளம் அமைத்தல், விவசாயிகளின் வருவாய் வீழ்ச்சி போன்ற இடர்பாடுகளை சந்திக்க நேரிடும். தென்னை நார் மற்றும் உமி ஆகியவை இயற்கையான சூரிய ஒளியின் உதவியுடன் முற்றத்தில் உலர்த்தப்படுகின்றன. மேலும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக உலர்த்தும் முற்றத்தின் எல்லையில் வலை தடுப்புடன் கூடிய சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது. எனவே, உற்பத்தி செயல்முறையின் அடிப்படையில் தென்னை நார் தொழில்களை மறு வகைப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post தென்னைநார் தொழில்களில் உள்ள சிக்கல்களை களைய வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் தமிழக அமைச்சர் மெய்யநாதன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Meiyanathan ,Union Minister ,Chennai ,Union Environment, Forest and Climate Change ,Bhupender Yadav ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...