×

அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகளின் படையெடுப்பை முறியடிக்க தயாராக இருங்கள்..ராணுவத்துக்கு வடகொரிய அதிபர் கிம் அழைப்பு

சியோல்: அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பை முறியடிக்க தயாராக இருக்கும்படி வடகொரிய அதிபர் கிம் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கம் முதலே வடகொரியா பல்வேறு ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டுப் போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. 3 நாடுகளின் போர் பயிற்சிகள் வடகொரியா மீதான போருக்கான ஆயத்தமாக கருதுகிறது. இதனால் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆத்திரம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று நடந்த வடகொரிய கடற்படை தினத்தில் உரையாற்றிய அதிபர் கிம், “அமெரிக்க அதிபர் பைடன், தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா 3 பேரும் குற்ற கும்பல்களின் தலைவர்கள். தற்போதுள்ள சூழலில் வடகொரிய கடற்படை போருக்கு தயாராக இருக்க வேண்டும். 3 நாடுகளின் படையெடுப்பு சதிகளை முறியடிக்க அனைத்து ராணுவமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார். இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

*தென்கொரியா கண்டனம்
3 நாடுகளின் தலைவர்களை குற்ற கும்பல்களின் தலைவர்கள் என வடெகொரியா அதிபர் கூறியதற்கு தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து தென்கொரிய வௌியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லிம் சூசுக் செய்தியாளர்களிடம் கூறியபோது, “3 நாடுகளின் தலைவர்களுக்கு எதிராக மிக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியது கண்டனத்துக்குரியது. அச்சுறுத்தும், ஆத்திரமூட்டும், பதற்றத்தை அதிகரிக்கும் பொறுப்பற்ற செயல்களை வடகொரியா கைவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.

The post அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகளின் படையெடுப்பை முறியடிக்க தயாராக இருங்கள்..ராணுவத்துக்கு வடகொரிய அதிபர் கிம் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : America ,South ,Korea ,Japan ,SEOUL ,Korean ,President ,Kim ,US ,Dinakaran ,
× RELATED தென்கொரியா எல்லையில் படைகளை குவிக்கும் வட கொரியா