×

ஆப்பிள் ஐ போன் 15 செப்.12ல் வெளியீடு

கலிபோர்னியா: ஆப்பிள் ஐபோன் 15 வரிசை வருகிற செப்டம்பர் 12ம் தேதி கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் வெளியிடப்பட உள்ளது. இதற்காக அழைப்பிதழில் ஆப்பிள் லோகோ நீலம் மற்றும் தங்க நிறத்தில் ‘‘வொண்டர்லஸ்ட்” என்று எழுதப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி ஆக.12ம் தேதி இரவு 10:30 மணி தொடங்கும் நிகழ்வில் இது தொடர்பான தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது. ஐபோன் 15 மாடல்களில் நான்கு புதிய மாடல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. விலை பட்டியலும் அன்று வெளியாகும் என்று தெரிகிறது.

The post ஆப்பிள் ஐ போன் 15 செப்.12ல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Apple ,California ,Cupertino, California ,Dinakaran ,
× RELATED ஐபோன் கேமரா தயாரிக்க தமிழக நிறுவனத்துடன் பேச்சு!!