×

நிலவின் தென்துருவத்தில் அலுமினியம், கால்சியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை உறுதி செய்தது பிரக்யான் ரோவர்: இஸ்ரோ தகவல்

டெல்லி: நிலவின் தென்துருவத்தில் அலுமினியம், கால்சியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்தது. நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 3 விண்கலத்தை இஸ்ரோ கடந்த மாதம் விண்ணுக்கு அனுப்பியது. அது தனது 41 நாள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, கடந்த 23ம் தேதி விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையில் இறங்கியது. இதன் மூலம் நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கிய உலகின் முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது. உலகில் எந்த நாடும் நிகழ்த்தாத வரலாற்று சாதனையை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.

நிலவின் தென்துருவத்தில் அலுமினியம், கால்சியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்தது. சல்ஃபர், இரும்பு. குரோமியம், சிலிக்கான், டைட்டானியம், மாங்கனீஸ் தாதுக்கள் இருப்பதையும் ரோவர் உறுதி செய்துள்ளது. ஆக்சிஜன் இருப்பதை உறுதி செய்த ரோவர் ஹைட்ரஜன் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து வருவதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. லேசர் ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி மூலம் நிலவில் உள்ள தனிமங்களை ரோவர் கண்டறிந்ததாகவும் இஸ்ரோ கூறியுள்ளது.

The post நிலவின் தென்துருவத்தில் அலுமினியம், கால்சியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை உறுதி செய்தது பிரக்யான் ரோவர்: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : south pole of ,moon ,ISRO ,Delhi ,south pole of the moon ,Dinakaran ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...