×

கிராம ஊருணியில் மீன்பிடி திருவிழா: மீன்களை கிலோ கணக்கில் அள்ளிச் சென்ற மக்கள்

சாயல்குடி: முதுகுளத்தூர் அருகே, இளஞ்செம்பூர் கிராம ஊருணியில் இன்று காலை மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு, கிலோ கணக்கில் மீன்களை பிடித்துச் சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியில் கடந்தாண்டு பெய்த மழையால் ஒரு சில ஊர்களில் உள்ள கண்மாய், ஊருணிகள் நிரம்பின. இதேபோல, இளஞ்செம்பூர் கிராமத்தில் காவல்நிலையம் அருகே உள்ள பெரிய ஊருணியில் தண்ணீர் நிரம்பியது. இதையடுத்து கெண்டை வகை மீன்கள், கெளுத்தி, உளுவை, கொறவை, அயிரை ஆகிய மீன் குஞ்சுகளை வாங்கி ஊருணியில் வளர்க்க விட்டனர். மேலும், வலை, தூண்டில் ஆகியவை மூலம் மீன் பிடிக்க கிராம மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. வெளியூர் நபர்கள் பிடிக்கக் கூடாது என்பதற்காக கிராம மக்கள் காவல் காத்து வந்தனர்.

இந்த நிலையில், ஊருணியில் தண்ணீர் வற்றியதால் கிராம மக்கள் மீன்களை பிடிக்க முடிவு செய்தனர். இயற்கை முறையில் வளர்ந்து வந்த மீன்களை பிடிக்க திருவிழா போல் நடத்த முடிவு செய்தனர். இதனையடுத்து கிராம மக்கள் இன்று காலையில் கச்சா வலை, துணிகள், பாத்திரங்கள் கொண்டு மீன்களை ஆர்வத்துடன் பிடித்து சென்றனர். நபர் ஒன்றிற்கு சுமார் 2 முதல் 3 கிலோ வரை எடையுள்ள மீன்களை பிடித்து சமையல் செய்வதற்காக வீடுகளுக்கு பிடித்து சென்றனர். கிராம மக்கள் ஒற்றுமையாக கூடி மீன் பிடித்தது மகிழ்ச்சியாக இருந்ததாக, அவர்கள் தெரிவித்தனர்.

The post கிராம ஊருணியில் மீன்பிடி திருவிழா: மீன்களை கிலோ கணக்கில் அள்ளிச் சென்ற மக்கள் appeared first on Dinakaran.

Tags : Sayalkudi ,Fishing Festival ,Langembur ,Bhubulathur ,Village Rurn Fishing Festival ,Dinakaran ,
× RELATED சாயல்குடி குடிசை மாற்று வாரிய...