×

தி.மலை கிரிவலத்துக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக 130 சிறப்பு பஸ்கள் இயக்கம்

வேலூர்: திருவண்ணாமலையில் மாதம் தோறும் பவுர்ணமியன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். அதன்படி ஆவணி மாத பவுர்ணமியொட்டி நாளை (30ம் தேதி) காலை 10.58 மணிக்கு தொடங்கி, 31ம் தேதி காலை 7.05 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரம் என்று அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக பக்தர்களின் வசதிக்காக வேலூர் மண்டலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 130 பஸ்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் இயக்க உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக வேலூர் மண்டல பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நாளை (30ம் தேதி) ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் என்பதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக வேலூர் மண்டலம் சார்பில் சென்னையில் இருந்து 30 சிறப்பு பஸ்களும், வேலூரில் இருந்து 50 சிறப்பு பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 30 சிறப்பு பஸ்களும், ஆற்காட்டிலிருந்து 20 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. எனவே பக்தர்கள் இந்த சிறப்பு பேருந்து சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

The post தி.மலை கிரிவலத்துக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக 130 சிறப்பு பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Mountain Krivalat ,Vellore ,Grivalam ,Pournamiya ,Nail Monthly Boutiquet ,mountain Krivala ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...