×

அறந்தாங்கி அருகே இடையாத்தூரில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்

*100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

அறந்தாங்கி : அறந்தாங்கி அருகே இடையாத்தூர் நாகம்மாள் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. சாலையின் இருபுறமும் நின்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இடையாத்தூர் கிராமத்தில் நாகம்மாள் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்லை பந்தயம் கோலாகலமாக நடைபெற்றது. பந்தயம் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான்மாடு என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது.

போட்டியில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 100க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.போட்டியில் பெரியமாடு பந்தய தூரத்தை சென்றுவர 10 மைல் தொலைவும், நடுமாடு 8 மைல் தொலைவும், கரிச்சான் மாடு 6 மைல் தொலைவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை நோக்கி மாடுகள் சீறிப்பாய்ந்தன.

அப்போது சாலையில் இருமருகிலும் நின்றிருந்த பொதுமக்கள் கரகோஷம் எழுப்பி மாட்டிற்கு உற்சாகப்படுத்தினர். போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசும், கேடயங்களும், நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது. பந்தயத்தை சாலையின் இருபுறம் பந்தய ரசிகர்கள் உற்சமாக கண்டு ரசித்தனர். நாகுடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post அறந்தாங்கி அருகே இடையாத்தூரில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் appeared first on Dinakaran.

Tags : Idididathur ,Santanthanki ,Internadathur ,Nagammal Temple ,Chandanangi ,
× RELATED அறந்தாங்கி அருகே ஆழ்துளை கிணறு அமைக்க...