×

சில்லி நூடுல்ஸ்

தேவையானவை.:

200 கிராம் நூடுல்ஸ்
1 பெரிய வெங்காயம்
1 கேரட்
1/2 கப் கோஸ்
1/2 கப் சிவப்பு குடை மிளகாய்
1/2 கப் பச்சை குடை மிளகாய்
வெள்ளை வெங்காயம் சிறிதளவு
ஸ்ப்ரிங் ஆனியன் ஒரு கையளவு
2 மேஜைக்கரண்டி சோயா சாஸ்
2 மேஜைக்கரண்டி வினிகர்
1 மேஜைக்கரண்டி கிரீன் சில்லிசாஸ்
1 மேஜைக்கரண்டி ரெட் சில்லி சாஸ்
2 பல் பூண்டு
1 பச்சை மிளகாய்
1 மேஜைக்கரண்டி மிளகு தூள்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெங்காயம், கேரட், கோஸ், பூண்டு, பச்சை மிளகாய், வெள்ளை வெங்காயம், மற்றும் குடை மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுட வைக்கவும். தண்ணீர் சுட்ட பின் அதில் ஒரு சிட்டிகை உப்பை தூவி நூடுல்ஸை போட்டு வேக வைக்கவும். நூடுல்ஸ் 90 சதவீதம் வெந்த பின் அதை எடுத்து தண்ணீரை வடிகட்டி ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து வைத்துக் கொள்ளவும். (நூடுல்ஸ் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கு எண்ணெய் சேர்க்கிறோம். இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக் கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து சுட வைக்கவும். எண்ணெய் சுட்ட பின் அதில் ஒரு மேஜைக் கரண்டி அளவு பொடியாக நறுக்கிய பூண்டு, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், மற்றும் பச்சை மிளகாயை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் கேரட், கோஸ், வெள்ளை வெங்காயம், சிவப்பு மற்றும் பச்சை குடை மிளகாய்களை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும். சுமார் ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் 2 மேஜைக் கரண்டி அளவு வினிகர், சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், கிரீன் சில்லி சாஸ், மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி வதக்கவும். அடுத்து இதில் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் நூடுல்ஸை போட்டு பக்குவமாக நூடுல்ஸ் உடன் இந்த காய்கறி கலவை கலக்குமாறு பிரட்டி போடவும். நூடுல்ஸ் நன்கு காய்கறிகள் கலவையுடன் கலந்த பின் அதில் ஒரு கையளவு ஸ்பிரிங் ஆனியன்களை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும். இதை ஒரு bowl ல் வைத்து கெட்சப் உடன் பரிமாறவும்.

The post சில்லி நூடுல்ஸ் appeared first on Dinakaran.

Tags :
× RELATED இளநீர் நன்னாரி ஜூஸ்