×

டீக்கடை தொழில்போட்டியில் கத்தியால் சரமாரியாக வெட்டிய கும்பல் போலீஸ் மீது நடவடிக்கைக்கோரி தர்ணா

*விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

விழுப்புரம் : விழுப்புரத்தில் டீக்கடை நடத்துவதில் ஏற்பட்ட தொழில் போட்டியில் கத்தியால் வெட்டிய கும்பல் மீது போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை, குற்றவாளி பெயரை சேர்க்கவில்லை, கொலை முயற்சி வழக்கு பதியவில்லை என்றுகூறி ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் மனைவி பிருந்தாவதி நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் பேச்சுவார்த்தைக்குப்பின் ஆட்சியரிடம் அளித்த மனுவில், எனது கணவர் ஜானகிபுரத்தில் டீக்கடை வைத்து நடத்தி வந்தார். எங்களது கடை அருகில் வெளியூரைச் சேர்ந்த சசிக்குமார் என்பவரும் டீக்கடை நடத்தினார். தொழில்போட்டி காரணமாக அடிக்கடி தகராறு செய்துவந்தார்.

இதனிடையே ஜானகிபுரம் பகுதியில் மேம்பாலப்பணிகள் நடந்து வருவதால் போதிய வியாபாரம் இல்லாமல் டீக்கடையை மூடிவிட்டுச் சென்றார். இதற்கு நாங்கள் வைத்த கடைதான் காரணம் என்று எனது கணவரை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று கூறிவிட்டுச் சென்றார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி சசிக்குமார் அவரது ஆதரவாளர்கள் எனது கணவரை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றனர்.

அங்கிருந்து ரத்தகாயங்களுடன் தப்பிச்சென்ற அவர் முண்டியம்பாக்கம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் 5 பேர் மீது வழக்குபதிவு செய்து சசிக்குமாரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் போலீசார் கொலை முயற்சி பிரிவில் வழக்கு பதியாமல், சாதாரண பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ராம்பிரசாத் என்பவரின் பெயரையும் எப்ஐஆரில் சேர்க்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென அந்தமனுவில் கூறப்பட்டுள்ளது.

The post டீக்கடை தொழில்போட்டியில் கத்தியால் சரமாரியாக வெட்டிய கும்பல் போலீஸ் மீது நடவடிக்கைக்கோரி தர்ணா appeared first on Dinakaran.

Tags : Dharna ,Villupuram ,
× RELATED எஸ்ஐ கர்ப்பமாக்கியதாக பெண் போலீஸ் தர்ணா