×

ஹீரோ டெஸ்டினி பிரைம்

ஹீரோ நிறுவனம் டெஸ்டினி 125 பிரைம் என்ற புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் டெஸ்டினி வரிசையில் அறிமுகம் செய்துள்ள மலிவான ஸ்கூட்டர் இதுவாகும். ஷோரூம் விலையாக சுமார் ரூ.71,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஏற்ெகனவே சந்தையில் உள்ள டெஸ்டினி எக்ஸ்டெக் எல்எக்ஸ்ஐ விட ரூ.7,749, டெஸ்டினி எக்ஸ்டெக் விஎக்ஸ்ஐ விட ரூ.14,239 குறைவாகும். மலிவான விலை என்பதால், டெஸ்டினி பிரைம் ஸ்கூட்டரில் பல்வேறு அம்சங்கள் விடுபட்டுள்ளன.

உதாரணமாக, எல்இடி ஹெட்லேம்புக்கு பதிலாக ஹாலோஜன் விளக்குகள் இடம்பெற்றுள்ளன. இதுபோல் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டருக்கு பதிலாக அனலாக் கிளஸ்டர் இடம்பெற்றுள்ளது. முந்தைய வேரியண்டுகளில் அழகுக்காக அமைக்கப்பட்டுள்ள குரோம் பூசப்பட்ட பாகங்கள், புளூடூத் இணைப்பு வசதி ஆகியனவும் இதில் இல்லை. மிக எளிமையான தோற்றத்தோடு அத்தியாவசிய இணைப்புகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

சீட்டுக்கு அடியில் யுஎஸ்பி சார்ஜிங் வசதி, விளக்கு இடம் பெற்றுள்ளது. மற்றபடி, தொழில்நுட்ப ரீதியாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை இதில் உள்ள 124.6 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 7,000 ஆர்பிஎம்மில் 9 எச்பி பவரையும், 5,000 ஆர்பிஎம்ல் 10.36 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். லிட்டருக்கு 56 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.

The post ஹீரோ டெஸ்டினி பிரைம் appeared first on Dinakaran.

Tags : Hero ,Dinakaran ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி...