×

கூடலூர் அரசுப் பேருந்தை முன் வந்து துரத்திய காட்டுயானை: ஓட்டுநர் சாதுர்யமாக பேருந்தை பின்னோக்கி இயக்கி தப்பினார்

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தை காட்டுயானை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரையொட்டி வனப்பகுதியில் பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து வருவது வழக்கமாகி வருகிறது. குறிப்பாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது, விலை நிலங்களை சேதப்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

இதுதவிர சாலைகளில் சுற்றி திரியும் யானைகள் வாகனங்களை வழிமறிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.கூடலூரிலிருந்து உதகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சனி பகவான் கோவில் அருகே கோவை செல்லும் அரசு பேருந்து செல்லும் போது எதிரில் வந்த ஒற்றை காட்டுயானை பேருந்தை நோக்கி வந்துள்ளது. இதை அடுத்து ஓட்டுநர் உடனே பேருந்தை நிறுத்தினார். யானை வழி மறித்ததால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.

இதை அடுத்து பேருந்தை பின்னோக்கி இயக்கி ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டதால் வாகனம் அருகே வந்த யானை சாலையை ஒதுங்கி சென்றது. உடனே டிரைவர் பஸ்சை வேகமாக ஓட்டி ஊட்டியை நோக்கி புறப்பட்டார். அதன்பின்னரே பயணிகள் நிம்மதி அடைந்தனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

The post கூடலூர் அரசுப் பேருந்தை முன் வந்து துரத்திய காட்டுயானை: ஓட்டுநர் சாதுர்யமாக பேருந்தை பின்னோக்கி இயக்கி தப்பினார் appeared first on Dinakaran.

Tags : Cuddalore government ,Cuddalore ,Nilgiri district ,Kuddalore National Highway ,Kudalurooyothi ,Cuddalore Govt ,Wildman ,Dinakaran ,
× RELATED நின்றிருந்த லாரி மீது கார் மோதி கடலூர் அரசு டாக்டர் படுகாயம்