×

அரங் கம்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விதைத்திருவிழா, மரபு விதை கண்காட்சி, நாட்டு ரக விதைகள் பகிர்வு, உணவுத்திருவிழா என வேளாண் சார்ந்த நிகழ்ச்சிகள் முன்னெப்போதையும் விட தற்போது அதிகளவில் நடந்து வருகின்றன. வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்கள் சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிற்சி வகுப்புகள், விவசாயிகளின் சந்திப்புகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. அத்தகைய நிகழ்ச்சிகளை முன்கூட்டியே விவசாயிகள் அறிந்துகொள்ள பாலம் அமைக்கிறது இந்த அரங்கம்.

தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், கள்ளக்குறிச்சி வேளாண்மை அறிவியல் நிலையம் ஆகியவை சார்பில் வரும் 22ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகள் குறித்தும், 29ம் தேதி தக்காளி மற்றும் மிளகாயில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை நடைமுறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இடம்- காளசமுத்திரத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையம்.
தொடர்புக்கு – 83009 78770.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 22ம் தேதி, விஞ்ஞான முறையில் கெண்டைமீன் வளர்ப்பு குறித்தும், 24ம் தேதி விஞ்ஞான முறையில் முயல் வளர்ப்பு குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
தொடர்புக்கு- 99405 42371

வனம் பவுண்டேசன், வானகம், செரு சோலை இணைந்து நடத்தும் உழவே தலை 2023 என்கிற கூட்டம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் நடைபெறுகிறது. மேலும் இயற்கை வேளாண்மை கருத்தரங்கம், மரபு விதைகள் கண்காட்சி, இயற்கை விளை பொருட்களின் விற்பனை சந்தை ஆகிய நிகழ்ச்சிகள் 27ம் தேதி நடைபெறுகிறது.
தொடர்புக்கு- 79044 40266

வேம்பு இயற்கை விவசாயக் குழுமம் சார்பில் வருகிற 27ம் தேதி மதுரை கப்பலூர் அரசு கலைக்கல்லூரியில் விதைத் திருவிழா நடைபெறுகிறது. இதில் வேளாண் விஞ்ஞானி பாமயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.
தொடர்புக்கு – 99435 95340

The post அரங் கம் appeared first on Dinakaran.

Tags : Aarang Gum ,Tamil Nadu ,
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...