×

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை செப்.26-க்கு ஒத்திவைப்பு..!!

புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை செப்டம்பர் 26-க்கு ஒத்திவைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர். இவர் தற்போது விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளார். அதிமுக அமைச்சரவையில் 8 ஆண்டுகாலம் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஊழல்கள், முறைகேடுகள் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.

இவர் மீதும், இவரது மனைவி ரம்யா மீதும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்து இருப்பதாக, புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் கடந்த 2021ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகம், ஆதரவாளர்களின் வீடுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். வழக்கில் விஜயபாஸ்கர், மனைவி ரம்யாவுக்கு எதிராக கடந்த மே 22-ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

அதனடிப்படையில் நீதிமன்றம் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. கடந்த முறை வழக்கு விசாரணையின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகஸ்ட் 29ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி, சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதேபோல் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவும் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கை வருகின்ற செப்டம்பர் 26ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை செப்.26-க்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Former ,C. Vijayabascar ,Pudukkottai ,Minister ,C. ,Vijayapascar ,Pudukkoda District ,C. Vijayapascar ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்...