
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் திடுக்கிடும் மோசடி நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் பெரும் மோசடி நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 2019 முதல் ஜூன் 2020 வரை பரனூர் சுங்கச்சாவடியில் 1.17 கோடி வாகனங்கள் பயணம் செய்துள்ள நிலையில், இதில் 62.37 லட்சம் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படவில்லை. மொத்தம் பயணித்த 1.17 கோடி வாகனங்களில் 62 லட்சம் வாகனங்களுக்கு முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் விலக்கு அளிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரனூர் சுங்கச்சாவடி வழியாக பயணித்த 53.27% வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாததும், சிஏஜி அறிக்கையில் அம்பலமாகியுள்ளது. ஆத்தூர் சுங்கச்சாவடியிலும் 36.43% வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படவில்லை என கணக்கு எழுதப்பட்டுள்ளது. ஆத்தூர் சுங்கச்சாவடி வழியாக பயணித்த சுமார் 89 லட்சம் வாகனங்களில் 32 லட்சம் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கவில்லை. நவீன ஊழியலின் அடையாளமாக பரனூர் சுங்கச்சாவடி விளங்குவதாக சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம் செய்துள்ளார்.
The post செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் திடுக்கிடும் மோசடி அம்பலம்: 53% வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கவில்லை appeared first on Dinakaran.