×

சென்னை பட்டினப்பாக்கத்தில் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் சரண்..!!

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் கடந்த 18-ம் தேதி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் சரணடைந்துள்ளனர். ஆற்காடு அருகே உள்ள புண்ணை கிராமத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி சுரேஷ் (எ) ஆற்காடு சுரேஷ் (42). இவர், புளியந்தோப்பு நரசிம்ம நகரில் வசித்து வந்தார். இவர் மீது, காஞ்சி சங்கரராமன், ரவுடி ராதாகிருஷ்ணன், சின்னா மற்றும் வழக்கறிஞர் பகத்சிங் கொலை வழக்கு உட்பட 7 கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி, வழிப்பறி, ஆள்கடத்தல் என 30க்கும் மேற்ப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 8 முறை போலீசார் குண்டர் சட்டத்தில் ஆற்காடு சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நேற்றுமுன் தினம் ஒரு வழக்கு தொடர்பாக ஆற்காடு சுரேஷ், தனது வழக்கறிஞருடன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, மாலையில் தனது நண்பர் மாதவனுடன் பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீனவ உணவகத்திற்கு சாப்பிட வந்தார். அங்கு, மணல்பரப்பில் அமர்ந்து ஆற்காடு சுரேஷ் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, காரில் வந்த அடையாளம் தெரியாத 6 பேர் கும்பல், ஆற்காடு சுரேஷை சுற்றிவளைத்து, அரிவாளால் சரமாரியாக வெட்டியது. தடுத்த நண்பர் மாதவனையும் அந்த கும்பல் வெட்டிவிட்டு காரில் தப்பியது. இதில் படுகாயமடைந்த ஆற்காடு சுரேஷை அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர், இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே, கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் 6 பேர் சிறையில் உள்ள நிலையில் நவீன், போஸ், சுரேஷ் ஆகிய 3 பேர் நாங்குநேரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

The post சென்னை பட்டினப்பாக்கத்தில் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் சரண்..!! appeared first on Dinakaran.

Tags : Arkadu Suresh ,Chennai ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...