×

நாடு முழுவதும் வரும் டிசம்பருக்குள் ஜியோ 5ஜி சேவை விரிவுபடுத்தப்படும் : முகேஷ் அம்பானி

மும்பை: நாடு முழுவதும் வரும் டிசம்பருக்குள் ஜியோ 5ஜி சேவை விரிவுபடுத்தப்படும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இந்தியாவை ஒரு முன்னணி டிஜிட்டல் சமூகமாக வடிவமைக்கும் நோக்கத்தில், கடந்த 7 ஆண்டுகளாக ரிலையன்ஸ் ஜியோவின் மாற்றும் பயணத்தை பெருமையுடன் வெளிப்படுத்தியுள்ளது. நாட்டின் டிஜிட்டல் பரிணாம வளர்ச்சிக்கு செயல்படும் ஜியோவின் தாக்கம் இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பால் விரிவடைந்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவன 46ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, சந்திரயான்-3 வெற்றிக்கு காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் “2047ம் ஆண்டில் தன்னம்பிக்கை நிறைந்த புதிய இந்தியா முழு வளர்ச்சியை எட்டும்”. செப்டம்பர். 19 விநாயகர் சதுர்த்தி முதல் வயர் இணைப்பு இன்றி அதிவேக இணைய வசதி கொண்ட ஜியோ ஏர் பைபர் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க மற்றொரு வாய்ப்பும், வருவாயும் அதிகரிக்க உள்ளது. கடந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.73,670 கோடி இருந்ததாகவும் கடந்த நிதியாண்டில் புதிதாக 2.60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி சாதனைப்படைத்துள்ளதாகவும் கூறினார். ஒரு நபர் சராசரியாக ஒரு மாதத்திற்கு 25 ஜிபி ஜியோ டேட்டாவை பயன்படுத்துகிறார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post நாடு முழுவதும் வரும் டிசம்பருக்குள் ஜியோ 5ஜி சேவை விரிவுபடுத்தப்படும் : முகேஷ் அம்பானி appeared first on Dinakaran.

Tags : Mukesh Ambani ,Mumbai ,GEO ,India ,GEO 5G ,Dinakaran ,
× RELATED முகேஷ் அம்பானி வீட்டு திருமண...