
கைரோ : எகிப்தில் நடைபெற்று வரும் 34 நாடுகளின் பயங்கரவாத கூட்டுப் பயிற்சியில் இந்தியா பங்கேற்றுள்ள வீடியோவை, இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை எகிப்து ராணுவத்தால் நடத்தப்படும் BRIGHT STAR கூட்டு ராணுவ பயிற்சியில் இந்த ஆண்டு இந்திய பாதுகாப்புப் படையின் சிறந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். செப்டம்பர் 16ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டுப் பயிற்சியில், 34 நாடுகளைச் சேர்ந்த 8000 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
காலாட் படை, விமானப்படை, தரைப்படை, சிறப்புப் படை என பல பிரிவுகளாக பயிற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமான எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது. இந்த பயிற்சியின் முக்கிய நோக்கமே கிழக்கு நாடுகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது என தெரிவித்துள்ள எகிப்து பாதுகாப்புத் துறை, எகிப்தில் உள்ள நஜீப் தளத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
The post எகிப்தில் 34 நாடுகளின் பயங்கரவாத கூட்டுப் பயிற்சியில் இந்தியா பங்கேற்றுள்ள வீடியோவை வெளியிட்டது ராணுவம்!! appeared first on Dinakaran.