×

வங்கிக் கணக்கு, பான், ஆதார் இணைப்பு இல்லாதோருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்: சிறப்புத் திட்ட செயலாக்கத்துறைச் செயலாளர் தாரேஸ் அகமது உறுதி

பெரம்பலூர்: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பித்திருக்கும் தகுதியுடைய பெண்களில் உரிய ஆவணங்கள் இல்லாதோருக்கும் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அகமது தெரிவித்திருக்கிறார். பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்களின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரசு செயலர் தாரேஸ் அகமது, வங்கி கணக்கு, பான் கார்டு இல்லாத, ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்காத பயனாளிகளுக்கு அஞ்சல வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும் என விளக்கம் அளித்தார். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை கிடைக்கும் என சிறப்புத் திட்ட செயலாக்கத்துறைச் செயலாளர் தாரேஸ் அகமது உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

The post வங்கிக் கணக்கு, பான், ஆதார் இணைப்பு இல்லாதோருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்: சிறப்புத் திட்ட செயலாக்கத்துறைச் செயலாளர் தாரேஸ் அகமது உறுதி appeared first on Dinakaran.

Tags : PAN ,Aadhaar ,Tarace Ahmed ,Perambalur ,Special Project ,
× RELATED உங்களுடைய PAN card ஆக்டிவாக இருக்கிறதா?…...