×

பட்டுக்கோட்டை திமுக பிரமுகர் என்.செந்தில்குமார் இல்ல திருமணம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார்

 

பாபநாசம்,ஆக.29: பட்டுக்கோட்டை திமுக பிரமுகர் என்.செந்தில்குமார்-லட்சுமி இவர்களின் மகன் டாக்டர் எஸ்.விக்னேஸ்வரனுக்கும், பழஞ்சூர் கே.செல்வம்-சுமித்திரை இவர்களின் மகள் டாக்டர் எஸ்.அனுஷ்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு பட்டுக்கோட்டை அறந்தாங்கி ரோடு கொண்டிகுளம் எஸ்.ஆர்ஏ.சி மஹாலில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அண்ணாதுரை வரவேற்றார். நகர்புற வளர்ச்சி துறை அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சரும், தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி,

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம் எம்.பி, அரசு தலைமை கொறடா கோ.விசெழியன் எம்.எல்.ஏ, மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், குடந்தை சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமண விழாவில் மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாவை அனிபா, சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கே. எஸ்.எம்குமார், சண்முகம் நர்சரி பி.எஸ்.குமார், பத்தாவது வார்டு செயலாளர் கார்த்தி, ராஜகிரி ஜபீருதீன் பாபு உள்பட திமுக நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

The post பட்டுக்கோட்டை திமுக பிரமுகர் என்.செந்தில்குமார் இல்ல திருமணம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Pallukkotta Djagagam ,N. Sendilkumar ,Minister ,Udhayanidhi Stalin ,Babanasam ,Palukkotta Djagagar Mukhagar N. Sentilkumar ,Lakshmi ,Dr. ,S. Vigneswaran ,Palanjur K. ,Parkkotta Dasagagar N. Senthilkumar ,Udhayanidi Stalin ,
× RELATED பதவி கேட்டு எம்எல்ஏக்கள் நெருக்கடி:...