ஜெயங்கொண்டம், ஆக.29: மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணைந்து நடத்தும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவு பயிற்சி ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு நடைபெற்றது . பயிற்சியினை மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குனர் குமார் பார்வையிட்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மொழியரசி உடன் பார்வையிட்டார்.
பள்ளி தலைமை ஆசிரியர் தவிக்குமார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் பயிற்சியினை ஒருங்கிணைத்து நடத்தினர். பட்டதாரி ஆசிரியர்களான சிங்காரவேலன், பாண்டியன், ஜெயராஜ், விஜயலட்சுமி, கல்பனா மற்றும் தர் ஆகியோர் பயிற்சியின் கருத்தாளர்களாக செயல்பட்டு கற்றல் விளைவு குறித்தும், மாணவர்கள் மனவெழுச்சி நலன் மேம்பாடு குறித்தும் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் தமிழ் ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் 77 பேர் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஐயப்பன் மற்றும் அந்தோணி சேவியர் ஆகியோர் செய்திருந்தனர்.
The post ஜெயங்கொண்டம் அரசு பள்ளியில் 9,10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவு பயிற்சி appeared first on Dinakaran.