×

சின்னகொல்லப்பட்டி ஊராட்சியில் புதிய ரேஷன் கடைக்கு பூமி பூஜை

சாத்தூர், ஆக.29: சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் சின்ன கொல்லப்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.13.40 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டும் பணிக்கு பூமி பூஜை விழா நடைபெற்றது. ஒன்றிய தலைவர் நிர்மலா கடற்கரை தலைமை வகித்து பூமிபூஜையை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், மேற்கு ஒன்றிய செயலாளர் கடற்கரை ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஸ்வரன் மற்றும் காமேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post சின்னகொல்லப்பட்டி ஊராட்சியில் புதிய ரேஷன் கடைக்கு பூமி பூஜை appeared first on Dinakaran.

Tags : Bhoomi Pooja ,Chinnakollapatti panchayat ,Chatur ,Chatur Panchayat Union ,Chinna Khilini Panchayat ,
× RELATED சாத்தூர் படந்தால் சந்திப்பில்...