×

பெண்ணிடம் தகராறு செய்தவர்கள் மீது வழக்கு

தேவதானப்பட்டி, ஆக 29: தேவதானப்பட்டி நாடார்தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்ராஜா மனைவி சித்ரா(35). இவர்கள் தேனி மற்றும் தேவதானப்பட்டியில் டீகடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதே பகுதியைச் சேர்ந்த காஜாமைதீன் குடும்பத்தினருக்கும் இவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சித்ரா வீட்டில் இருந்தபோது அங்கு வந்த காஜாமைதீன் மகன்கள் அஷ்ரப்அலி, ஆசிக்அலி ஆகியோர் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த சித்ரா வீட்டில் இருந்த து£க்க மாத்திரையை சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் சித்ராவை மீட்டு தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இது குறித்து சித்ரா அளித்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பெண்ணிடம் தகராறு செய்தவர்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,Karthikaraja ,Chitra ,Nadar Road ,Theni ,Devdanapatti ,Dinakaran ,
× RELATED தேவதானப்பட்டி பகுதியில் தென்னை...