×

விவசாய பயிற்சி முகாம்

மானாமதுரை, ஆக.29: மானாமதுரை வேளாண்மை விரிவாக்க மையத்தில் பாரம்பரிய நஞ்சில்லா இயற்கை விவசாயம், அங்கக சான்று பெறுவது குறித்து பயிற்சி முகாம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் ரவிசங்கர் தலைமை வகித்து வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல் திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கினார்.

சிவகங்கை விதை சான்று உதவி இயக்குநர் பாரம்பரிய நஞ்சில்லா இயற்கை விவசாய முறைகள் குறித்தும் வேளாண்மையின் சிறப்புகள், மத்திய அரசின் பிஜிஎஸ் இணையதளத்தில் பதிவு செய்வது குறித்து விளக்கினார்.
வேளாண் அலுவலர் கிருத்திகா, துணை வேளாண் அலுவலர் சப்பாணிமுத்து திட்ட பயன்பாடுகள் குறித்து விளக்கினர். உதவி வேளாண் அலுவலர்கள் பாண்டியம்மாள், தினேஷ் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

The post விவசாய பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : training ,Manamadurai ,Nanjilla Organic Farming ,Manamadurai Agricultural Extension Center ,Training Camp ,Dinakaran ,
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...