
ராமநாதபுரம், ஆக.29: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘2023-2024-ம் ஆண்டிற்கான தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ல் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும் 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது வழங்கப்படவுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. விருதின் பெயர்: மாநில அரசு விருது தகுதிகள்: 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தை (31 டிசம்பரின்படி), கீழ்க்கண்டவற்றில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும்.
பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகிவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வுவை ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல். இதுபோன்ற தகுதியடைய பெண் குழந்தைகள் 27.10.2023-க்குள் கருத்துருவினை மாவட்ட சமூகநல அலுவலா் மாவட்ட சமூகநல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரியில் நேரில் சமர்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
The post வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.