
- வாதிலா மல்லனாம்பட்டி பரமேஷ்வரி அம்மன் கோயில் வரசுபாபிஷேகம்
- வத்தலகுண்டு
- வத்தலகுண்டு ஒன்றியம்
- மல்லானம் பட்டி
- அங்கல பரமேஷ்வரி அம்மன்
- சாங்க்கி
- கருப்பண்ணசாமி
- வாதிலா மல்லானம்பட்டி பரமேஷ்வரி தேவி கோயில் வரசுபாபிஷேகம்
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு ஒன்றியம், மல்லனம் பட்டியில் அங்காள பரமேஸ்வரி அம்மன், சங்கிலி கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு மண்டல பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்து வந்தன. இந்நிலையில் நேற்று கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி அங்காள பரமேஸ்வரி, சங்கிலி கருப்பண்ணசாமி, மதுரை வீரன் சாமி, அக்னி வீரபத்திர சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பூசாரிகள் கண்ணன், வீரபாண்டி ராஜா, பாலாஜி மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
The post வதிலை மல்லனம்பட்டி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் appeared first on Dinakaran.