×

குளிர்பான வியாபாரிக்கு கொலை மிரட்டல்: திண்டுக்கல் எஸ்பி ஆபீசில் புகார்

திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்த குளிர்பான கடை வியாபாரி இன்பராஜ் (49). இவர் நேற்று திண்டுக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அம்மனுவில், ‘திண்டுக்கல் நாகல் நகரில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. பின்னர் அந்த கட்டிடத்தை அதன் உரிமையாளரிடம் இருந்து கடந்த ஆக.21ம் தேதி நான் விலைக்கு வாங்கிவிட்டேன்.

இந்நிலையில் எனது கடையின் பூட்டை உடைத்து சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அவர்களை தட்டி கேட்டால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். மேலும் அடியாட்களை வைத்து கடையை இடித்து தரைமட்டமாக்கி விடுவேன் என மிரட்டுகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தனர்.

The post குளிர்பான வியாபாரிக்கு கொலை மிரட்டல்: திண்டுக்கல் எஸ்பி ஆபீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Dindigul SP ,Dindigul ,Inbaraj ,Nagalnagar, Dindigul ,Dindigul district SP ,
× RELATED திண்டுக்கல் கோட்டைக்குளம் அருகே தொட்டியில் குவிந்த குப்பைகள் அகற்றம்