
- காஞ்சிபுரம் காமாச்சி அம்மன் கோவில்
- காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில்
- காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்த இரு உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன. இதில் ரொக்கமாக ரூ.58,51,470, 190 கிராம் தங்கம், 460 கிராம் வெள்ளி இருந்தது. கோயில் செயல் அலுவலர் சீனிவாசன் முன்னிலையில் அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா, கோயில் செயல் அலுவலர்கள் முத்துலட்சுமி, அமுதா, மற்றும் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் நிர்வாகிகள் கீர்த்தி வாசன், ஜெயராமன், மற்றும் காமாட்சி அம்மன் கோயில் மணியக்காரர் சூரிய நாராயணன் ஆகியோர் உண்டியல் பணம் எண்ணும் பணியினை மேற்பார்வை செய்தனர்.
The post காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ரூ.58 லட்சம் உண்டியல் வசூல் appeared first on Dinakaran.