×

சாலை விபத்தில் வாலிபர் பலி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே, சாலை விபத்தில் வாலிபர் பலியானார். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அடுத்த பாண்டூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் தணிகாசலம் (28). இவர் எலக்ரிட்சீயனாக வேலை செய்து வந்தார்.நேற்று மறைமலைநகரில் இருந்து இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டு நோக்கி சென்றார். அப்போது செங்கல்பட்டு அருகே புலிப்பாக்கம் பகுதியில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தணிகாசலம் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்.

உடனே அக்கம்பக்கத்தினர் தணிகாசலத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து தணிகாசலம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சாலை விபத்தில் வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : volliber ,Chengalpadu ,Chengalputtu District ,Thirukkazulundam ,Pantur School Street ,
× RELATED செங்கல்பட்டு அருகே கார் உதிரி பாக தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து