×

குன்றத்தூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மலையேறும் வீராங்கனைக்கு நிதியுதவி, பாராட்டு விழா

தாம்பரம்: குன்றத்தூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மலையேறும் வீராங்கனைக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சென்னை மண்ணிவாக்கம் பகுதியில் வசிப்பவர் முத்தமிழ்செல்வி (34). மலையேறும் வீராங்கனை ஆவார். இவர் மலைகளில் கண்களை மூடி ஏறுதல், வில்வித்தை, குதிரை சவாரி உள்ளிட்ட பல சாதனைகளில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 5ம் தேதி உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறத் துவங்கி மே 23ம் தேதி 29,035 அடி உயரத்தில் உள்ள சிகரத்தை அடைந்தார். இவரது பயணத்திற்கு தமிழக அரசு மற்றும் தனியார் பங்களிப்பு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியது குறிப்பிடத்தக்கது. இவரை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கவுரவித்தார்.

இதன் மூலம் தமிழகத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றார். இவருக்கு குன்றத்தூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் படப்பையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் குன்றத்தூர் ஒன்றியக்குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை மனோகரன், முத்தமிழ்செல்வியின் சாதனையை பாராட்டி பேசினார். மேலும், முத்தமிழ் செல்வி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவில் உள்ள கிளிமாஞ்சாரோ மலையில் ஏற உள்ளார். இதற்காக அவருக்கு இந்த விழாவில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

The post குன்றத்தூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மலையேறும் வீராங்கனைக்கு நிதியுதவி, பாராட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Kunradthur South Union DMK ,Tambaram ,Kunradathur South Union DMK ,Chennai ,Mannivakkam ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...