×

கொருக்குப்பேட்டையில் நிர்வாணமாக ஓடிய வாலிபரால் பரபரப்பு

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டையில், நிர்வாணமாக ஓடிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொருக்குப்பேட்டை அண்ணா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் லட்சுமி பாஸ் மால். இவர் புதுப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சோனியா தேவி (28). நேற்று லட்சுமி பாஸ் மால் வேலைக்கு சென்றார். வீட்டில் சோனியா தேவி இரவு தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில், அதிகாலை சத்தம் கேட்டு எழுந்தபோது, போது மர்ம நபர் ஒருவர் நிர்வாணமாக வீட்டில் இருந்து ஓடியது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, அதில் பதிவான காட்சிகளை வைத்து ஆர்.கே.நகர் போலீசில் சோனியா தேவி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை வைத்து கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகர் குறுக்கு தெருவை சேர்ந்த பரத் என்கின்ற பரத் குமார் (22) என்பவர், லட்சுமி பாஸ் மால் வீட்டில், திருடுவதற்காக நிர்வாணமாக நுழைந்து, பின்னர் அங்கிருந்து ஓடியது தெரியவந்தது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவர்மீது பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது.  இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கொருக்குப்பேட்டையில் நிர்வாணமாக ஓடிய வாலிபரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Korkapet ,Korakupet ,Korkhipet Anna ,Nagar ,3rd Street Lakshmi Bas ,Korukapet ,
× RELATED மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சாலை...