×

செல்போன் நம்பர் கேட்டு இளம்பெண்களுக்கு தொல்லை: வாலிபர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே, இளம்பெண்களுக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு அருகே மகேந்திராசிட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏராளமான இளம்பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் செங்கல்பட்டு பகுதியில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் செங்கல்பட்டு புறவழிசாலை அருகே களத்துமேடு பகுதியில் இளம் பெண்கள் வேலைக்கு சென்று தங்கள் அறைக்கு திரும்பும் போது, அவர்களிடம் செல்போன் நம்பர் கேட்டு, ஒருவர் ஆபாசமாக பேசி வருவதாக செங்கல்பட்டு நகர போலீசாருக்கு புகார் வந்தது.

இதன் அடிப்டையில், செங்கல்பட்டு களத்துமேடு பகுதியைச் சேர்ந்த உதயக்குமார் (23) என்பவரை நேற்று நகர போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். உதயக்குமார் வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி என காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.

The post செல்போன் நம்பர் கேட்டு இளம்பெண்களுக்கு தொல்லை: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Mahendracity ,Dinakaran ,
× RELATED மதுபோதை தகராறில் நண்பனை வெட்டி...