×

சாலை விபத்தில் காயமடைந்த குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் மருத்துவ செலவுக்கு ரூ.5 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சாலை விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் லலிதா மருத்துவ செலவிற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: கடந்த 9ம் தேதி ராயபுரம் என்ஆர்டி மேம்பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சமூக ஆர்வலரும், சென்னை வடமண்டல குழந்தைகள் நலக்குழு உறுப்பினருமான லலிதா குடும்பத்தினர், மருத்துவ செலவிற்கு போதுமான நிதியின்றி பெரிதும் சிரமப்பட்டு வருவதாகவும், அவருக்கு நிதியுதிவி வழங்கக் கோரியும் கோரிக்கை வரப்பெற்றுள்ளது.

வழக்கறிஞர் லலிதா, குழந்தைகள் நலக்குழு உறுப்பினராகவும், ஏழை எளிய மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை உதவிகளை அளித்தும் மக்கள் பணியாற்றி வருகிறார். அவருடைய குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டும், அவர் விரைவில் உடல்நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியில் ஊக்கத்துடன் செயலாற்றவும், அவரது மருத்துவச் செலவுக்கு ரூ.5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சாலை விபத்தில் காயமடைந்த குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் மருத்துவ செலவுக்கு ரூ.5 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : child welfare committee ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Lalita ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...