×

இந்திய எல்லை பகுதியான அருணாசலப்பிரதேசத்தில் கிராமம் அமைத்துள்ள சீனா: 100க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டியுள்ளதாக குற்றச்சாட்டு..!!

இட்டாநகர்: இந்திய எல்லை பகுதியான அருணாசலப்பிரதேசத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை சீனா கட்டியிருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது. சீனாவின் ராணுவம் தொடர்பான ஆண்டு அறிக்கையை அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையான பெண்டகன், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அதில் இந்திய எல்லை பகுதியில் குறிப்பாக மெக்மகன், டிஸரி நதிக்கரையில் நூற்றுக்கணக்கான வீடுகளை கட்டியிருக்கும் சீனா, ஒரு கிராமத்தையே அமைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான செயற்கைகோள் புகைப்படங்களையும் அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது. சீன ராணுவம் தொடர்ந்து எல்லையை ஆக்கிரமித்து வருவதாக இந்தியா குற்றம்சாட்டி வரும் நிலையில், அமெரிக்காவின் அறிக்கை அதனை உறுதி செய்திருக்கிறது. எல்லையில் பதற்றத்தை தணிக்க இருதரப்பினர் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் நிலையில் சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபடுவது எல்லையில் அழுத்தத்தை அதிகரிப்பதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்காவின் அறிக்கை பற்றி விளக்கம் அளித்திருக்கும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம், இதுகுறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது. …

The post இந்திய எல்லை பகுதியான அருணாசலப்பிரதேசத்தில் கிராமம் அமைத்துள்ள சீனா: 100க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டியுள்ளதாக குற்றச்சாட்டு..!! appeared first on Dinakaran.

Tags : China ,ArunasalapPradesh ,Indian border ,itanagar ,indian border region ,Indian Border Village ,ArunasalapPradesh, China ,
× RELATED நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சீன விண்கலம்