×

திருவள்ளூரில் மருத்துவமனை முதல்வர் அலுவலகம் முற்றுகை

திருவள்ளூர்: அலவன்ஸ் வழங்கக்கோரி மருத்துவமனை முதல்வர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 26 மாதமாக வழங்காத அலவன்ஸ் தொகையை வழங்கக்கோரி மருத்துவமனை முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க திருவள்ளூர் மாவட்டத்தலைவர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.

சங்கசெயலாளர் நந்தகுமார், பொருளாளர் அன்பழகன், ஜெகதீசன் உட்பட30க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நேற்று மருத்துவப்பணியை புறக்கணித்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவமனை முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் முதல்வர் திலகவதியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க திருவள்ளூர் மாவட்ட தலைவர் மருத்துவர் பிரபு சங்கர் கூறியதாவது: மருத்துவர்களுக்கான அலவன்ஸ் வழங்கும் வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் 11 மணி வரை வெவ்வேறு வகையில் போராட்டங்கள் நடைபெறும் என்றார்.

The post திருவள்ளூரில் மருத்துவமனை முதல்வர் அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Hospital Chief Office ,Thiruvallur ,Chief Minister ,Alavance Vendakkori Hospital ,Tamil Nadu Government Doctor Association Thiruvallur District ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...