×

திருத்தணி அருகே மகளை கிண்டல் செய்த நண்பருக்கு கத்தி குத்து

திருத்தணி: திருத்தணி அடுத்த வேலஞ்சேரி காலனி பஜனை கோவில் தெருவில் வசிப்பவர் பலராமன் மகன் மணிகண்டன்(40). இவருடைய மகளும் தோழியும் பிறந்தநாள் விழாவிற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது காந்தி ரோட்டில் உள்ள நல்ல தண்ணீர் குடம் அருகே நின்று கொண்டிருந்த திருத்தணி காந்தி ரோடு மூணாவது தெரு வசிக்கும் லோகநாதன் மகன் பிரேம்குமார்(32), மணிகண்டன் மகளை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மகள் தந்தையிடம் புகார் கூறியுள்ளார்.

இதையடுத்து மணிகண்டன் வீட்டிலிருந்து நேராக பிரேம்குமாரிடம் வந்து, அவரின் முதுகு மற்றும் உடலில் பேனா கத்தியால் குத்தி கீறல் போட்டு உள்ளார். இதில் பலத்த காயமடைந்த பிரேம்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர். மணிகண்டனும் பிரேம்குமாரும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post திருத்தணி அருகே மகளை கிண்டல் செய்த நண்பருக்கு கத்தி குத்து appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Thiritani ,Balaraman ,Manikandan ,Valangeri ,Bajana temple street ,Tiruthani ,
× RELATED உழவு, களையெடுப்பு, அறுவடை உள்ளிட்ட...