
புதுடெல்லி: வக்கீல்கள் முன்னிலையில் நடக்கும் சுயமரியாதை திருமணம் செல்லும் என உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளது.
ராமதாதபுரம் மாவட்டம். மோர்பண்மணயைச் சேர்ந்த இளவரசன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வக்கீல்கள் முன்னிலையில் நடந்த அவரது சுயமரியாதை திருமணம் செல்லாது எனக்கூறி என உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அதற்கு எதிராக இளவரசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘சம்பந்தப்பட்ட பெண்ணிடம் மாவட்ட பெண் நீதிபதி விசாரித்து சீலிடப்பட்ட கவரில் வாக்குமூலத்தை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த 4ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரவீந்திரபட் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேலன்,‘‘ சுயமரியாதை திருமணம் என்பது சம்பந்தப்பட்ட ஆண்-பெண் இருவரும் ஒரு புரோகிதரை வைத்தோ அல்லது அவர்களது விரும்பும் மதரீதியான முறைப்படியோ, அல்லது நண்பர்கள், குடும்பத்தார்கள் மற்ற நபர்கள் முன்னிலையிலோ செய்து கொள்ளலாம். இதில் மற்ற நபர்கள் என்பது வக்கீல்களுக்கும் பொருந்தக் கூடியதாகும் என தெரிவித்தார்.
இதையடுத்து உத்தரவில், ‘‘வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் நபரின் அடிப்படையை நிலைநாட்டும் உரிமை அனைவருக்கும் உண்டு. அதனால் இளவரசன் விவகாரத்தில் வக்கீல்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட சுயமரியாதை திருமணம் செல்லத்தக்க ஒன்றாகும். ஏனெனில் வக்கீல்கள் தங்கள் தனிப்பட்ட திறன்களில் திருமணத்தை நடத்தலாம். ஆனால் அது தொழில்முறைகளில் தான் இருக்க கூடாது. அதனால் இந்த விவகாரத்தில் மனுதாரரின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது என தெரிவித்த நீதிபதிகள், உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய முந்தைய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
The post வக்கீல்கள் முன்னிலையில் நடக்கும் சுயமரியாதை திருமணம் செல்லும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.