×

வெறி நாய் கடித்த கால்நடைகளுக்கு தடுப்பூசி

திருத்தணி: திருத்தணி அடுத்த திருவலங்காடு ஒன்றியம் உட்பட்டது இலுப்பூர் கிராமம். அந்தப்பகுதியில் உள்ள வெறிநாய் ஒன்று விவசாயிகளுடைய 21 கால்நடைகளை கடித்துக் குதறியது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், திருத்தணி கால்நடை உதவி இயக்குனர் தாமோதரனுக்கு தகவல் கொடுத்தனர். அவரது உத்தரவின் பேரில் ஆர்க்காடுகுப்பம் கால்நடை மருத்துவமனை மருத்துவர் மணிமேகலை தலைமையில் மருத்துவ குழுவினர் சம்பவ கிராமத்திற்கு விரைந்து வந்தனர். பாதிப்படைந்த கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டனர்.

The post வெறி நாய் கடித்த கால்நடைகளுக்கு தடுப்பூசி appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Ilupur ,Tiruvalangadu Union ,Dinakaran ,
× RELATED அன்னவாசல், இலுப்பூர், விராலிமலையில்...