×

அரியவகை நோய் பாதிப்புகளை அறிய ஜெனிடிக் பரிசோதனையை கருவில் செய்ய வேண்டும்: எம்.பி கனிமொழி என்.வி.என் சோமு வலியுறுத்தல்

சென்னை: சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் ‘அஸ்வதா சேம்பர் ஆஃப் துலாபாராவின்’ (ACT) சார்பில் அரிய வகை நோய்களுக்கான விழிப்புணர்வு குறித்து மருத்துவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி என்.வி.என் சோமு அளித்த பேட்டி: ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் கருவுற்ற பின் ஜெனிடிக் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். அந்த பரிசோதனையில் 23 ஆயிரம் ஜீன்ஸ்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். இது தொடர்பான ஆய்வகம் கிண்டியில் அமைக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது. மேலும், சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் பதிவு செய்வதற்கான மையமும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை 60 குழந்தைகள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு சிகிச்சைக்காக 50 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கும். இந்நிதியினை தமிழகத்தில் 4 பேர் மட்டுமே பயன்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post அரியவகை நோய் பாதிப்புகளை அறிய ஜெனிடிக் பரிசோதனையை கருவில் செய்ய வேண்டும்: எம்.பி கனிமொழி என்.வி.என் சோமு வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : MP Kanimozhi NVN Somu ,Chennai ,Aswatha Chamber of Tulapara ,ACT ,Chennai Chepakkam ,Press Forum ,Dinakaran ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் மழை நீரில்...