×

கூகுள் முதல் யூடியூப் வரை 20 பெரிய நிறுவனங்களை ஆளும் இந்தியர்கள்: ஆதிக்கம் குறித்து எலான் மஸ்க் திடீர் கருத்து

நியூயார்க்: கூகுள் முதல் யூடியூப் வரை 20 பெரிய நிறுவனங்களில் இந்திய வம்சாவளிகள் தலைமை நிர்வாக அதிகாரிகளாக இருப்பது குறித்து எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிர்வாகிகள் உலகின் முன்னணி நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கின்றனர். உலகளாவிய புள்ளிவிவரங்களின்படி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 20 தலைமை நிர்வாக அதிகாரிகளின் (சிஇஓ) பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் வெளியிட்ட பதிவு ஒன்றில், உலகளாவிய புள்ளிவிவரத்தில் வெளியிடப்பட்ட பட்டியலில் சர்வதேச நிறுவனங்களில் இந்தியர்கள் உயர் பதவிகளில் வகித்து இருப்பது குறித்து குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் வெளியான பட்டியலின்படி பார்த்தால் நான்கு நிறுவனங்களில் பெண்கள் சிஇஓக்களாக உள்ளனர்.

உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா மற்றும் 20 பெரும் நிறுவனங்களின் சிஇஓக்களாக இருக்கும் சஞ்சய் மெஹ்ரோத்ரா (மைக்ரான்), சாந்துன் நாராயண் (அடோப்) சத்யா நாதெல்லா (மைக்ரோசாப்ட்), சுந்தர் பிச்சை (கூகுள்), ஜெய் சௌத்ரி (ஜேஸ்கேலர்), அரவிந்த் கிருஷ்ணா (ஐபிஎம்), நீல் மோகன் (யூடியூப்), ஜார்ஜ் குரியன் (நெட்ஆப்), லீனா நாயர் (பிரெஞ்சு ஃபேஷன்), லக்ஷ்மன் நரசிம்மன் (ஸ்டார்பக்ஸ்), அஞ்சலி சூட் (விமியோ), ரங்கராஜன் ரகுராம் (விஎம்வேர்), ரவிக்குமார் எஸ் (காக்னிசன்ட்), விமல் கபூர் (ஹனிவெல்), ரேவதி அத்வைதி (ஃப்ளெக்ஸ்), வசந்த் நரசிம்மன் (நோவார்டிஸ்), சஞ்சய் ஜா (மோட்டோரோலா மொபிலிட்டி), விவேக் சங்கரன் (ஆல்பர்ட்சன்ஸ்), ஜெயஸ்ரீ உல்லால் (அரிஸ்ட்ரா நெட்வொர்க்ஸ்), நிகேஷ் அரோரா (பாலோ ஆல்டோ) ஆகியோர் முன்னிலை பட்டியலில் உள்ளனர்.

The post கூகுள் முதல் யூடியூப் வரை 20 பெரிய நிறுவனங்களை ஆளும் இந்தியர்கள்: ஆதிக்கம் குறித்து எலான் மஸ்க் திடீர் கருத்து appeared first on Dinakaran.

Tags : Google ,YouTube ,Elan Musk ,New York ,Dinakaran ,
× RELATED கூகுள் மேப்பை நம்பி...