×

நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: நடிகர் வடிவேலுவின் தம்பி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் நடிகர் சிம்பு கதாநாயகனாக அறிமுகமான காதல் அழிவதில்லை திரைப்படத்தில் நடித்துள்ளார். இரண்டு படங்களில் மட்டுமே நடித்த அவர் பின்னர் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது. இதைத்தொடர்ந்து அவர் ஜவுளிக்கடை வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன் கடந்த சில நாட்களாக கல்லீரல் செயலிழப்பு காரணமாக மதுரை ஐராவதநல்லூரில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.

இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார். நடிகர் வடிவேலுவின் தாயார் சமீபத்தில் மறைந்த நிலையில், அவரது சகோதரரும் இறந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெகதீசன் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு..க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திரைக்கலைஞர் வடிவேலு அவர்களின் தம்பியான ஜெகதீஸ்வரன் (52) அவர்கள் உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தார் என்று அறிந்து வருந்துகிறேன்.

உடன்பிறந்த உற்ற துணையான தன் தம்பியை இழந்து வாடும் வடிவேலு அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Vativelu ,Jekateswaran ,Chief Minister ,CM. G.K. ,Stalin ,Chennai ,CM ,G.K. Stalin ,Thumbi Jekadeswaran ,Simbu ,Thumbi Jekhatieswaran ,B.C. ,
× RELATED மழை நிலவரம் குறித்து மாவட்ட...