×

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா நாளை கொடியேற்றம்: வெளிமாநில, வெளிநாடுகளில் இருந்து திரளும் கூட்டம்

நாகப்பட்டினம் : உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள நிலையில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வருவதால் வேளாங்கண்ணி விழா கோலம் பூண்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டுள்ளனர்.

குறிப்பாக மாதா சொரூபம் தாங்கிய வாகனத்தில் மரியே வாழ்க என்ற முழக்கமிட்டு மாதா புகழ் பாடியபடி திண்டுக்கல், திருச்சி, மதுரை, விழுப்புரம், கடலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாதயாத்திரையாக பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் வருகை அதிகரிப்பால் வேளாங்கண்ணியில் உள்ள தங்கும் விடுதிகள், பேருந்து நிலையம், உணவகங்கள், கடைவீதி ஆகிய இடங்களில் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. பக்தர்களுக்கு வசதியாக பல்வேறு இடங்களில் கழிவறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. 4 மாவட்டங்களை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

The post வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா நாளை கொடியேற்றம்: வெளிமாநில, வெளிநாடுகளில் இருந்து திரளும் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Velankanni Cathedral ,Nagapattinam ,Tamil Nadu ,
× RELATED மாடு தூக்கி வீசியதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி