×

இன்னும் நான் சாதிக்க நிறைய இருக்கிறது: நீரஜ் சோப்ரா பேட்டி

வெற்றிக்கு பின் நீரஜ் சோப்ரா அளித்தபேட்டி: ஒவ்வொரு போட்டியிலும் என் மீது அழுத்தம் கொடுப்பது எனக்கு வழக்கம் ஆனால் இது போன்ற பெரிய போட்டிகளில் சிறப்பாக செயல்பட வேண்டிய பொறுப்பு எனக்கு அதிகம் உள்ளது. அதாவது எனது 100 சதவீதத்தை கொடுத்து கவனம் செலுத்த வேண்டும், இன்னும் நான் சாதிக்க நிறைய இருக்கிறது. பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. உலக சாம்பியன்ஷிப் போட்டி ஒலிம்பிக்கை விட கடினமாக இருக்கும், எந்த போட்டியாளரையும் நீங்கள் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த வெற்றியை ஆண்டுதோறும் மீண்டும் செய்ய விரும்புகிறேன். மேலும் இந்தியர்கள் என்னுடன் மேடையில் சேர வேண்டும் என்று நான் விரும்புகிறேன், என்றார்.

சொந்த ஊரில் கொண்டாட்டம்
25 வயதான நீரஜ் சோப்ரா ஹரியானாவின் பானிபட்டில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். தனது விளையாட்டு திறனால் முன்னேற்றம் கண்டார். அந்த மாநிலத்தில் உள்ள கந்த்ரா தான் அவரது சொந்த கிராமம். ஒலிம்பிக், உலக தடகள சாம்பியன்ஷிப் என தங்கம் வென்ற அவரது சாதனையை சொந்த கிராம மக்களும், உறவினர்களும் கொண்டாடி வருகின்றனர். நீரஜ், உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும் தங்கப் பதக்கம் வென்றுள்ளது நம் நாட்டுக்கு மிகவும் பெருமையான தருணம். அவர் இந்தியா திரும்பியதும் இதனை விமரிசையாக கொண்டாடுவோம், என அவரது தந்தை சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

The post இன்னும் நான் சாதிக்க நிறைய இருக்கிறது: நீரஜ் சோப்ரா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Neeraj Chopra ,
× RELATED ஈட்டி எறிதலில் தங்கம், வெள்ளி